பூக்களை பறித்து விட்டு
புன்னகைக்கிறவர்களை
ரசிப்பதில்லை அவள்
கை வீசினால்
காற்றுக்கும் வலிக்குமென்று
நடப்பவள்
என்னவள்
Wednesday, October 29, 2008
யாரவள்
Posted by சதீஷ் குமார் at 10:26 AM 5 comments
Labels: என்னவள்
Tuesday, October 28, 2008
Monday, October 20, 2008
நானும் அவைகளும்
அதிகாலை மெல்லிருட்டில்
உன் வீட்டு
முல்லைப் பூக்களும்
நானும்
காத்திருக்கிறோம்
அவைகள் பறிக்கப்படவும்
நான் பறிக்கப்பட்டத்திற்காகவும்
Posted by சதீஷ் குமார் at 2:30 AM 0 comments
Labels: தனிமை
Monday, October 6, 2008
பனிக்காலம்
Posted by சதீஷ் குமார் at 10:41 AM 1 comments
Labels: தனிமை
உனக்கானவை
Posted by சதீஷ் குமார் at 10:32 AM 3 comments
Labels: என்னவள்
சீண்டல்
நான் தாமதமாய்
வந்ததற்காக
கோபித்துக் கொள்கிறாய் .
மன்னித்து விடு...
நாளையும் தாமதமாகத்தான்
வரப் போகிறேன்.
உன் செல்ல கோபத்தை ரசிக்க
Posted by சதீஷ் குமார் at 1:58 AM 0 comments
Labels: ஊடல் பக்கங்கள்
Friday, October 3, 2008
அச்சச்சோ...!
அச்சச்சோ...!
இது கூட தெரியலையா ?
சத்தமிட்டு நகைக்கிறாய்
தெரிந்ததை கூட
தெரியாது என்பது
காதலின் முக்கிய விதி .
தெரியாதா எனக்கு.
Posted by சதீஷ் குமார் at 4:06 AM 2 comments
Labels: காதல் விதிகள்
Thursday, October 2, 2008
விடுபட்டவள்
கடல்
யானை
குழந்தை
எத்தனை முறை பார்த்தாலும்
சலிக்காது என்பார்கள்.
எப்படி மறந்தார்கள் ?
உன்னை
இந்த பட்டியலில் சேர்க்க.....
Posted by சதீஷ் குமார் at 9:51 PM 0 comments
Labels: ஒப்பீடு
Tuesday, September 30, 2008
மழையும் நீயும்
உனக்கு மழை பிடிக்கும் என்றாய்
நானும் நனைந்து பார்த்தேன்
ஒரு மழை நாளில்...
மழையும்
உன்னைப் போல தான்
பட படவென தொடங்கி
சில்லென்று முடிகிறது.
Posted by சதீஷ் குமார் at 6:33 AM 0 comments
Labels: என்னவள்
காத்திருக்கும் பொழுதுகளில்
உனக்காக காத்திருக்கும்
பொழுதுகளில்
கவிதைகள் எழுதுகிறேன்
என்றாலும் கூட
நீ வந்த பிறகு தான்
அவைகள்
வாசிக்க தகுதியுடையதாகின்றன .
Posted by சதீஷ் குமார் at 5:07 AM 0 comments
Labels: தனிமை